உக்ரைனின் முதல் துணை வெளியுறவு மந்திரி, ஏப்ரல் 9இல் இந்திய பயணம்.!
உக்ரைனின் முதல் துணை வெளியுறவு மந்திரி எமின் ட்ஜபரோவா ஏப்ரல் 9 முதல் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
நான்கு நாள் பயணம்: கடந்த ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா-உக்ரைன் மோதல் தொடங்கிய பின்னர் இந்தியாவுக்கு வரும் முதல் உக்ரைன் அதிகாரியாக, உக்ரைனின் முதல் துணை வெளியுறவு மந்திரி எமின் ட்ஜபரோவா ஏப்ரல் 9இல் நான்கு நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தருகிறார்.
இந்தியா-உக்ரைன் உறவு: இந்த பயணத்தின் போது எமின், இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் (எம்இஏ) சஞ்சய் வர்மா, செயலாளர் ஆகியோருடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த சந்திப்பில் உக்ரைனின் தற்போதைய நிலைமை, இந்தியா-உக்ரைன் இடையிலான நட்புறவு மற்றும் பரஸ்பர உலகளாவிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னேற்றம்: உக்ரைனுடன் இந்தியா எப்போதும் அன்பான நட்புறவு மற்றும் பன்முக ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. மேலும் கடந்த 30 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம், கல்வி, கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என வெளியுறவு அமைச்சகத்தின் வெளியீடு தெரிவித்துள்ளது.
துணை வெளியுறவு அமைச்சரின் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான புரிதல் மற்றும் நலன்களை மேலும் மேம்படுத்துவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமையும்.