குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து..! 3 பேர் உயிரிழப்பு, 16 பேர் காயம்..!

பிரெஞ்சு ரிவியரா நகரமான கிராஸில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இதன்பிறகு, தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
மேலும், 16 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.