மருத்துவமனையில் கோர ‘தீ விபத்து’…21 பேர் பரிதாபமாக பலி.!!
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பரிதாபமாக 21 பேர் உயிரிழந்தனர்.
சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
மதியம் 1 மணி அளவில் திடீரென ஏற்பட்ட விபத்தில், சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த நோயாளிகளில் 71 பேர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மேலும் தீக்கு பயந்து சிலர் ஜன்னல்களில் இருந்தும் குதித்தனர்.
இந்த கோர தீ விபத்தில் குறைந்தது 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அவசர சிகிச்சைக்காக அடையாளம் தெரியாத மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபட்டதாகவும் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றார்கள்.
மேலும், திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை, இது குறித்து பெய்ஜிங்கி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ விபத்தில் பரிதாபமாக 21 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.