அமெரிக்காவில் தீ விபத்து..! 160 ஆண்டுகள் பழமையான தேவாலயம் எரிந்து நாசம்..!

Congregational United Church

அமெரிக்காவில் 160 ஆண்டுகள் பழமையான தேவாலயம் மின்னல் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமானது.

அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் உள்ள 160 ஆண்டுகள் பழமையான ஸ்பென்சரின் முதல் காங்கிரேஷனல் யுனைடெட் தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் தேவாலயத்தில் இருந்த தானியங்கி அலாரம் ஒலித்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

ஆனால், தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ மளமளவென தேவாலயத்தில் இருந்து அதன் தரை தளம் வரை பரவியது. இறுதியில் ஆலயத்தின் கோபுரம் தீயினால் முற்றிலும் எரிந்து கீழே விழுந்தது. இதுகுறித்து தெரிவித்த தீயணைப்பு வீரர்கள், அப்பகுதியில் மழைபெய்யும் போது ஏற்பட்ட மின்னல் காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தின் போது தேவாலயம் காலியாக இருந்ததால், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த தேவாலயம் மரம் மற்றும் பிற பொருட்களைப் பயன்படுத்தி 1800 களில் கட்டப்பட்டது என்று தேவாலயத்தின் இடைக்கால போதகர் புரூஸ் மேக்லியோட் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்