நேட்டோவின் 31-வது உறுப்பினராக இணைந்தது பின்லாந்து.!
நேட்டோவின் அமைப்பில் 31வது உறுப்பினராக பின்லாந்து இணைந்துள்ளது.
வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு என அழைக்கப்படும் ராணுவக் கூட்டணி அமைப்பான நேட்டோவில், பின்லாந்து உறுப்பினராக இணைவதற்கு பல மாதங்களாக விண்ணப்பித்து வந்த நிலையில், நேட்டோவின் அமைப்பில் 31-வது உறுப்பினராக இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கான நேட்டோவின் அதிகாரபூர்வ உறுப்புரிமை ஆவணங்களை வெளியுறவு மந்திரி, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனிடம் ஒப்படைத்தார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால், அண்டை நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், நேட்டோ அதன் 31வது உறுப்பு நாடாக பின்லாந்திற்கு அனுமதி அளித்துள்ளது.
இதன்மூலம் NORDIC நாடுகளில் ஒன்றான பின்லாந்து அதிகாரப்பூர்வமாக உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு கூட்டணியில் நுழைந்து, ரஷ்யாவுடனான அதன் எல்லையை வலுப்படுத்தியுள்ளது.