உலகின் மகிழ்ச்சியான நாடு… 7வருடங்களாக தொடரும் சாதனை… இந்தியாவின் நிலைமை.?
World Happiest Country 2024 : இன்று உலகமெங்கும் சர்வதேச மகிழ்ச்சி தினம் (மார்ச் 20) கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் ஒவ்வொரு நாட்டில் வாழும் மக்களின் மகிழ்ச்சி அளவை பொறுத்து அந்த நாட்டின் மகிழ்ச்சி தரவரிசை சர்வதேச அளவில் வெளியிடப்படுவது வழக்கம்.
Read More – இனி மெட்ரோ தான் சென்னையின் அடையாளம்… ரெடியானது ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ பிளான்.!
இந்தாண்டு மொத்தம் 143 நாடுகளில் வாழும் மக்களின் மகிழ்ச்சி அளவிடப்பட்டு தரவரிசை வெளியிடபட்டுள்ளது. அதில், முதலிடத்தில் பின்லாந்து (Finland) நாடு உள்ளது. மேலும், கடந்த 7 வருடங்களாக பின்லாந்து நாடு தான் உலகில் மகிழ்ச்சிகரமாக வாழும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் பின்லாந்து தொடர்ந்து வருகிறது.
அதன் அண்டை நாடுகளான டென்மார்க் ,ஐஸ்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் டாப் 10 லிஸ்டில் உள்ளன. அமெரிக்கா, மேற்கு ஐரோப்பியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் சரிவை சந்தித்துள்ளன. ஆமெரிக்கா 23 வது இடத்திலும், ஜெர்மனி 24வது இடத்திலும், இந்தியா 126வது இடத்திலும், கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தானும் உள்ளது.
உலகில் மகிழ்ச்சிகரமான நாடுகளின் டாப் 10 லிஸ்ட்…
- பின்லாந்து
- டென்மார்க்
- ஐஸ்லாந்து
- ஸ்வீடன்
- இஸ்ரேல்
- நெதர்லாந்து
- நார்வே
- லக்சம்பர்க்
- சுவிட்சர்லாந்து
- ஆஸ்திரேலியா