பெருவில் அரசுக்கு எதிராக போராட்டம்..! 50க்கும் மேற்பட்டோர் காயம்..!
பெருவில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீஸாருடன் ஏற்பட்ட மோதலில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பெருவில் அதிபர் டினா போலுவார்டே பதவி விலகக் கோரி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பல்வேறு இடங்களில் கலவரமாக மாறியது. தற்பொழுது பெருவின் தெற்கு புனோ பகுதியில் உள்ள இலவே நகரில் உள்ள காவல் நிலையம் மீது சுமார் 1,500 எதிர்ப்பாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். இதனையடுத்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த மோதலில் 50க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காயமடைந்துள்ளனர். இலவே நகரில் எட்டு பேர் கண்கள் மற்றும் வயிற்றில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.