FIFA WorldCup2022: ஈரான் வெளியேற்றம்! கொண்டாடிய நபரை சுட்டுக்கொன்ற அதிகாரிகள்.!
ஃபிஃபா உலகக் கோப்பையில் இருந்து ஈரான் அணி வெளியேறியதைக் கொண்டாடிய நபர் அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கத்தாரில் நடந்துவரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடரின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் நேற்று குரூப்-பி விலுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் அணிகள் விளையாடியது. இந்த போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் ஈரான் அணி, அமெரிக்காவிடம் தோல்வி அடைந்து நாக் அவுட் கனவை இழந்தது.
இதனால் ஈரான் அணி தொடரை விட்டு வெளியேறியது. ஈரானின் இந்த உலகக்கோப்பை தோல்வியை, மெஹ்ரான் சமக் என்ற 27 வயதான ஈரானிய நபர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். இதனால் தேசத்திற்கு எதிராக செயல்பட்டதன் அடிப்படையில் மெஹ்ரான் சமக், பந்தர் அன்சலி என்று இடத்தில் வைத்து ஈரானிய பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டார்.
இந்த தகவலை ஒஸ்லோவை தலைமையாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் (IHR) குழு, தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
His name was #MehranSamak. He was shot in the head by state forces when he went out to celebrate the Islamic Republic’s loss at #FIFAWorldCup2022 in Bandar Anzali last night like many across the country. He was just 27 years old.#مهسا_امینی pic.twitter.com/rfJuuODUiq
— Iran Human Rights (IHR NGO) (@IHRights) November 30, 2022
மேலும் இந்த போட்டியின் கடைசி நிமிடங்களில் ஈரான் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெஹதி தரேமி தவற விட்டார். இதனால் ஈரான் அணி, அமெரிக்காவிடம் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க அணி, நாக் அவுட்டுக்கு முன்னேறியுள்ளது.
இதுவரை உலகக்கோப்பையில் ஒருமுறை கூட நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறாத ஈரான் அணி, இந்தமுறையும் அந்த கனவை இழந்து விட்டது. ஆட்டம் முடிந்ததும் கண்ணீரில் ததும்பிய மெஹதி தரேமியை, அமெரிக்க அணியின் ஆன்டனி ராபின்சன் ஆறுதல் படுத்தினார்.
That’s why we love football! #USAvsIran #WorldCup2022 #Qatar2022 #Iran #كأس_العالم_قطر_2022 pic.twitter.com/83Liaayon8
— Expats In Tripoli (@ExpatsTripoli) December 1, 2022