சானிடைசரால் கண்பார்வை குறைபாடு, கோமா… திரும்ப பெறும் FDA!

hand sanitizers

hand sanitizers: மெத்தனால் இருக்கும் சானிடைசர்களை திரும்ப பெறுகிறது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம்.

நாட்டில் கொரோனா தொற்றுநோய் காலத்தில் பொதுமக்கள் தங்களது கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள ஹேண்ட் சானிடைசர் பயன்படுத்த அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் பல வகையான ஹேண்ட் சானிடைசர்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டுவந்தது.

இதில் சில சானிடைசர்கள் பாதிப்புகளை ஏற்படுத்தும் நச்சு பொருட்கள் இருப்பதாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதன்படி, பாதிப்புகளை ஏற்படுத்தும் ஹேண்ட் சானிடைசர்கள் பலவற்றை பயன்படுத்த வேண்டாம் என்றும் அதனை திரும்ப பெறுவதாகவும் கடந்தாண்டு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், நச்சு மற்றும் மெத்தனால் இருக்கும் ஹேண்ட் சானிடைசர்களை திரும்ப பெறுவதாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), பல்வேறு வகையான சானிட்டைசர்களின் தரம் மற்றும் அதன் லேபிளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது.

அதில், அருபா அலோ ஹேண்ட் சானிடைசர் மற்றும் அருபா அலோ அல்கோலடா ஜெல் ஆகியவையில் நச்சு மற்றும் மெத்தனால் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக அந்த சானிடைசர்களை திரும்ப பெறுவதாக FDA தெரிவித்துள்ளது. இந்த வகை சானிடைசர்கள் மே 2021 முதல் அக்டோபர் 2023 வரை அமெரிக்காவில் ஆன்லைனில் மூலம் விற்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

நச்சு மற்றும் மெத்தனால் இருக்கும் சானிடைசர்களை பயன்படுத்தினால் தோல் பிரச்சனைகள், கண்பார்வை குறைபாடு, குமட்டல், தலைவலி, மயக்கம், சிறுநீரக செயலிழப்பு, நரம்பு பிரச்சனை மற்றும் கோமா போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் அது இறப்பு வரை செல்லும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்