அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பீச் ஹவுசில் எஃப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அமெரிக்காவின் டெலாவேர் பகுதியில் உள்ள ரெஹோபோத் கடற்கரையில் உள்ள அதிபர் ஜோ பைடனின் வீட்டில் எஃப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். நீதித்துறை நடத்திய இந்த சோதனையில் ரகசிய ஆவணங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று அவரது வழக்கறிஞ்ர் தெரிவித்தார்.
முன்னதாக, பைடனின் வாஷிங்டன் அலுவலகத்திலும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ரகசிய ஆவணங்களை ஜோ பைடன் கையாள்வது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையில் ரகசிய ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
மேலும் அமெரிக்காவின் நீதித்துறை, பைடன் துணை ஜனாதிபதியாக இருந்த காலத்துடன் தொடர்புடைய சில பொருட்கள் மற்றும் கையால் எழுதப்பட்ட குறிப்புகளை மதிப்பாய்வு செய்தது. முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் வீட்டிலும் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து ஜோ பைடன் தனது வீதி சோதனை செய்வதற்கு ஒத்துழைப்பதாக உறுதியளித்தார்.
சென்னை : வருமான வரித்துறை கடந்த சில நாட்களாகவே அதிரடியான சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், இன்று ஒரே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்று…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ சமீபத்தில் இந்திய வீரர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதில் குறிப்பாக, தேசிய அணிக்கு…
சென்னை : பிஎஸ்என்எல் (BSNL) , ஜியோ (JIO) , ஏர்டெல் (Airtel), வோடபோன் (vi), போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின்…
சென்னை : இசைஞானி இளையராஜா தற்போது படங்களுக்கு இசையமைப்பது குறைந்துள்ளது என்றாலும் அடிக்கடி சில இடங்களில் இசைக்கச்சேரிகளை நடத்தி மக்களை மகிழ்வித்து…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நேற்று இறுதிக்கட்ட…