அதிபர் ஜோ பைடனின் பீச் ஹவுஸில் எஃப்.பி.ஐ சோதனை..!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பீச் ஹவுசில் எஃப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அமெரிக்காவின் டெலாவேர் பகுதியில் உள்ள ரெஹோபோத் கடற்கரையில் உள்ள அதிபர் ஜோ பைடனின் வீட்டில் எஃப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். நீதித்துறை நடத்திய இந்த சோதனையில் ரகசிய ஆவணங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று அவரது வழக்கறிஞ்ர் தெரிவித்தார்.
முன்னதாக, பைடனின் வாஷிங்டன் அலுவலகத்திலும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ரகசிய ஆவணங்களை ஜோ பைடன் கையாள்வது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையில் ரகசிய ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
மேலும் அமெரிக்காவின் நீதித்துறை, பைடன் துணை ஜனாதிபதியாக இருந்த காலத்துடன் தொடர்புடைய சில பொருட்கள் மற்றும் கையால் எழுதப்பட்ட குறிப்புகளை மதிப்பாய்வு செய்தது. முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் வீட்டிலும் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து ஜோ பைடன் தனது வீதி சோதனை செய்வதற்கு ஒத்துழைப்பதாக உறுதியளித்தார்.