அப்பாவான ஜஸ்டின் பைபர்.. பிறந்தது ஆண் குழந்தை! குவியும் வாழ்த்துக்கள்..
கனடா : பிரபல கனடா பாப் பாடகர் ஜஸ்டின் பைபர் மற்றும் ஹெய்லி தம்பதியினர் ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்துள்ளனர்.
30 வயதாகும் ஜஸ்டின் பைபர் (Justin Bieber) இந்தியாவிலும் 20 வயதிலே மிகவும் பிரபலமானவர், குறிப்பாக 90ஸ் கிஸ்ட்களுக்கு கூட இவரை பற்றி தெரியும். அதற்கு காரணம், இவரது பாடல்கள் தான். அதிலும் முக்கியமாக ‘baby baby baby oh’ பாடல் மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜஸ்டின் பைபர் மற்றும் ஹெய்லி பீபர் ஆகியோர் 2018 இல் திருமணம் செய்து கொண்டனர், இந்த ஆண்டு மே மாதம் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக ஜஸ்டின் அறிவித்தார். இருவரின் வாழ்க்கையிலும் ஒரு புதிய கட்டம் தொடங்கிவிட்டது. ஆம், திருமணமான 6 ஆண்டுகளுக்குப் பிறகு, தம்பதியினர் பெற்றோர்களாக மாறியுள்ளனர.
ஜஸ்டின் பைபர் மனைவி ஹெய்லி பீபருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஜாக் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜஸ்டின் மற்றும் ஹெய்லி ஆகியோர் குழந்தையின் பாதம் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்டு, ‘வீட்டிற்கு வெல்கம் ஜாக் ப்ளூஸ் பீபர்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து, இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
View this post on Instagram