பிரபல ராப் பாடகரின் ட்விட்டர் முடக்கம்..! எலான் மஸ்க் கூறிய காரணம் ..?
அமெரிக்காவின் பிரபல ராப் பாடகர் கன்யே வெஸ்ட் வியாழனன்று ஹிட்லரைப் புகழ்ந்து, யூத எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிட்ட பிறகு, ட்விட்டரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் கூறுகையில் கன்யே வெஸ்ட் அவரது ட்விட்டர் பக்கத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பதிவிட்டுள்ளார் இது ட்விட்டர் விதிகளை மீறும் விதமாக உள்ளதால் அவரது கணக்கை ட்விட்டர் முடக்கியுள்ளது.
நான் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். இருந்த போதிலும், வன்முறையைத் தூண்டுவதற்கு எதிரான எங்கள் விதியை அவர் மீண்டும் மீறியதால் அவரது கணக்கு இடைநிறுத்தப்படுகிறது ” என்று எலோன் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.
I tried my best. Despite that, he again violated our rule against incitement to violence. Account will be suspended.
— Elon Musk (@elonmusk) December 2, 2022