அமெரிக்க தேர்தலில் தோல்வி! நாளை பேசும் கமலா ஹாரிஸ்!

நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று அதிபரானார். கமலா ஹாரிஸ் 224 மாகாணங்களில் வெற்றி பெற்றார்.

kamala harris

அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார். தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். இது இவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கான வெற்றியாளர் ட்ரம்ப் என அறிவித்தபோது கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள் கண்கலங்கி அழுதார்கள்.

தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், கமலா ஹாரிஸ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் கூட எந்த பதிவும் பதிவு செய்யவில்லை. தோல்வி குறித்தும் ஆதரவாளர்களுக்கு எதாவது சொல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுகுறித்து இன்னும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசவில்லை. இந்நிலையில், கமலா ஹாரிஸ் எப்போது ஆதரவாளர்களிடம் பேசப்போகிறார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, நாளை ​​​​கமலா ஹாரிஸ் தனது அல்மா மேட்டரான ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் வைத்துப் பேசவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் பேசுவது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால்,அமெரிக்க நிறுவனம் வெளியிட்டு வரும் தகவலின் படி அவர் நாளை ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் வைத்துத் தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்துப் பேச வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாகவே, தேர்தலில் வெற்றிபெற்றால் இன்று இரவு தனது ஆதரவாளர்களுடன் மகிழ்ச்சியாகப் பேசத் திட்டமிட்டு இருந்துள்ளார். ஆனால், டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று ஒட்டுமொத்தமாக இந்த திட்டமே வீணாகிவிட்டதால் நாளை பொறுமையாகப் பேச கமலா ஹாரிஸ் பேசவுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. எனவே, நாளை உண்மையில் கமலா ஹாரிஸ் பேசுவாரா ? அல்லது பேசுவதை தவிர்ப்பாரா? என்பது தெரிய வரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்