மெட்டா நிறுவனம், முகநூலில் பயனர்களின் அக்கௌன்ட் மற்றும் கடவுச்சொல் விவரம் திருடப்படுவதாக, 1 மில்லியன் பயனர்களுக்கு எச்சரித்துள்ளது.
ஆப்பிள் ஸ்டோர்ஸ் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர்ஸ் போன்றவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்யப்படும் சில செயலிகள்(Apps) ஃபேஸ் புக் மூலம் உள்நுழைய(Login) அனுமதி கேட்கிறது, இதனால் இந்த ஆப்ஸ்கள்(Apps) ஃபேஸ் புக் பயனர்களின் தகவல்களை எளிதாக திருடுவதற்கு வசதியாக இருக்கிறது என்று மெட்டா நிறுவனம் சமீபத்தில் சுமார் 1 மில்லியன் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.
மெட்டா நிறுவனம், இந்த ஆண்டு 400 க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகளை(Apps) அடையாளம் கண்டுள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தது. அவை ஃபோட்டோ எடிட்டர்கள், மொபைல் கேம்கள் அல்லது ஹெல்த் டிராக்கர்கள் என வேறுபெயர்களில் இந்த ஆப்ஸ் வேலை செய்வதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இந்த செயலிகள் பயனர்களின் உள்நுழைவு தகவலைத் திருடுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரச்னைக்குரிய அப்ளிகேஷன்களை அகற்றுவதற்கு வசதியாக ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு ஏற்கனவே இந்தச் சிக்கலைத் தெரிவித்ததாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த 400 ஆப்ஸ்களில் 45 ஆப்ஸ் தனது ஆப் ஸ்டோரில் இருப்பதாகவும், அவை அகற்றப்பட்டுள்ளதாகவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கூகுள் பிளே ஸ்டோர்ஸ் அனைத்து தீங்கிழைக்கும் செயலிகளையும் நீக்கியதாக தெரிவித்துள்ளது. சைபர் கிரிமினல்கள் மக்களை ஏமாற்றவும் அவர்களின் கணக்குகள் மற்றும் தகவல்களைத் திருடவும் இது போன்ற செயலிகளைப் பயன்படுத்துகிறார்கள், ”என்று மெட்டாவில் உலகளாவிய அச்சுறுத்தல் இடையூறுகளின் இயக்குனர் “டேவிட் அக்ரானோவிச்” கூறியுள்ளார்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…