முகநூலில் பயனர்களின் தகவல் திருடப்படுவதாக 1 மில்லியன் பயனர்களுக்கு எச்சரிக்கை – மெட்டா

Default Image

மெட்டா நிறுவனம், முகநூலில் பயனர்களின் அக்கௌன்ட் மற்றும் கடவுச்சொல் விவரம் திருடப்படுவதாக, 1 மில்லியன் பயனர்களுக்கு எச்சரித்துள்ளது. 

ஆப்பிள் ஸ்டோர்ஸ் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர்ஸ் போன்றவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்யப்படும் சில செயலிகள்(Apps) ஃபேஸ் புக் மூலம் உள்நுழைய(Login) அனுமதி கேட்கிறது, இதனால் இந்த ஆப்ஸ்கள்(Apps) ஃபேஸ் புக் பயனர்களின் தகவல்களை எளிதாக திருடுவதற்கு வசதியாக இருக்கிறது என்று மெட்டா நிறுவனம் சமீபத்தில் சுமார் 1 மில்லியன் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

மெட்டா நிறுவனம், இந்த ஆண்டு 400 க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்  செயலிகளை(Apps) அடையாளம் கண்டுள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தது. அவை ஃபோட்டோ எடிட்டர்கள், மொபைல் கேம்கள் அல்லது ஹெல்த் டிராக்கர்கள் என வேறுபெயர்களில் இந்த ஆப்ஸ் வேலை செய்வதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இந்த செயலிகள் பயனர்களின் உள்நுழைவு தகவலைத் திருடுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரச்னைக்குரிய அப்ளிகேஷன்களை அகற்றுவதற்கு வசதியாக ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு ஏற்கனவே இந்தச் சிக்கலைத் தெரிவித்ததாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த 400 ஆப்ஸ்களில் 45 ஆப்ஸ் தனது ஆப் ஸ்டோரில் இருப்பதாகவும், அவை அகற்றப்பட்டுள்ளதாகவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கூகுள் பிளே ஸ்டோர்ஸ் அனைத்து தீங்கிழைக்கும் செயலிகளையும் நீக்கியதாக தெரிவித்துள்ளது. சைபர் கிரிமினல்கள் மக்களை ஏமாற்றவும் அவர்களின் கணக்குகள் மற்றும் தகவல்களைத் திருடவும் இது போன்ற செயலிகளைப் பயன்படுத்துகிறார்கள், ”என்று மெட்டாவில் உலகளாவிய அச்சுறுத்தல் இடையூறுகளின் இயக்குனர் “டேவிட் அக்ரானோவிச்” கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்