மீண்டும் மீண்டும் பணிநீக்கம்..! 10 ஆயிரம் ஊழியர்களின் வேலை பறிபோனது.! முன்னணி நிறுவனம் அதிரடி.!
பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா அதன் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், கடந்த நவம்பர் மாதம் உலகம் எங்கும் பல்வேறு இடங்களில் வேலைபார்த்து வரும் 11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். இது அந்நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களில் 13 சதவீதம் ஊழியர்களாகும்.
தற்பொழுது நான்கு மாதங்களுக்கு பிறகு இரண்டாவது முறையாக நிறுவனத்தின் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யபோவதாக மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
ஜுக்கர்பெர்க் கூறுகையில், மனித இனத்தின் எதிர்காலத்தை மெட்டா உருவாக்கி வருகிறது. நிறுவனம் வரும் மாதங்களில் பல பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அத்துடன் சில திட்டங்களை ரத்து செய்து புதிய பணியமர்த்தல் விகிதங்களைக் குறைக்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கையில் எங்கள் நிறுவனத்தின் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யபோவதாகவும், இதுவரை பணியமர்த்தாத சுமார் 5,000 கூடுதல் வேலைகளை மூட எதிர்பார்ப்பதாகவும் கூறினார். இது உங்களுக்கு கடினமாகத்தான் இருக்கும், இதை தவிர வேறு வழி இல்லை என்று அவர் மேலும் கூறினார்.