முடங்கியது வாட்சாப் – ஃபேஸ்புக் – இன்ஸ்டாகிராம்! பதறும் பயனர்கள்!
இன்று இரவு 8.30 மணி முதல் பல்வேறு நாடுகளில் வாட்சாப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய முக்கிய இணைய தளங்கள் முடங்கிவிட்டன. அதாவது அந்த செயலிகளில் புகைப்படங்கள், ஒலி கோப்புகள், விடீயோக்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்ய இயலவில்லை.
இந்த பிரச்சனை ஐரோப்பா நாடுகள், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் மட்டும் நிலவியது. மேலும் குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் வாட்சாப் செயலி மூலமாக குறுந்தகவல் கூட செயல்படவில்லை என கூறப்படுகிறது. அதுபற்றி அதிகாரப்பூரவ தகவல் வெளியாகவில்லை.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளதாம். இந்த திடீர் செயல் இழப்பிற்கு காரணம் என்னவென்று தெரியாமல் அந்த செயலிகளின் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.