இஸ்ரேலில் உச்சக்கட்ட பாதுகாப்பு! ஆபத்தானதா அமெரிக்க அதிபரின் பயணம்?
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான யுத்தம் தீவிரமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த சூழலில் இஸ்ரேலுக்கு இன்று சென்றுள்ள அமெரிக்க அதிபரின் பயணம் ஆபத்தானதா என கேள்வி எழுந்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ்இடையேயான யுத்தம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் குறிப்பாக ஹமாஸ் அமைப்பினர் அதிகமாக இருக்கும் காசா பகுதியில் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு, பெருமளவு உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. ஹமாஸ் இயக்கத்தை ஒடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் தீவிரமாக போரிட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இரு தரப்பும் போரை நிறுத்த கோரி, உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்த அசாதாரண சூழலில், காசாவில் உள்ள அல் – அஹிலி மருத்துவமனை மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை மீதான தாக்குதலில் 500 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 4 ஆயிரம் பேர் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியானது. இந்த குண்டுவீச்சில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என கூறப்படுகிறது.
பரபரப்பாகும் போர் பதற்றம்.. இஸ்ரேல் புறப்பட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.!
மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்தது. இருப்பினும், மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு, இஸ்லாமிக் ஜிகாத் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால், மருத்துவமனை மீது யார் தாக்குதல் நடத்தியது என கேள்வி எழுந்துள்ளது. இதுபோன்று பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இஸ்ரேலுக்கு இன்று செல்லும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுடன் சந்திக்கவுள்ளார். போர் நிலவரம், பாதிப்புகள் குறித்து இஸ்ரேல் அமைச்சரவையுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இதனிடையே, ஜோர்டான் மன்னர் அப்துல்லா, எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாவை சந்திக்கும் திடிரென ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று இஸ்ரேல் சென்றுள்ளார் ஜோ பைடன். அதுமட்டுமில்லாமல், மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்கா, காசாவில் மனிதாபிமான உதவிகளையும் செய்யவுள்ளது. குடிநீர், உணவு மற்றும் மருந்து மாத்திரைகளை கிடைப்பதை உறுதி செய்ய அமெரிக்கா வலியுறுத்தியது.
மருத்துவமனை மீது தாக்குதல் – 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு : பாலஸ்தீன அதிபர்
எனவே, இரண்டு முறை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிலிங்கன் இஸ்ரேல் என்ற நிலையில், அதிபர் பைடன் இன்று செல்கிறார். ஆண்டனி பிலிங்கன் டெல் அவிவ் சென்றபோது ஏவுகணை தாக்குதல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இதனால் பதுங்கு குழிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுக்காப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் பயணத்தை முன்னிட்டு இஸ்ரேல் நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இஸ்ரேலில் என்ன செய்யப்போகிறார் பைடன், அவரது பயணம் ஆபத்தானதா என பல்வேறு கேள்வி எழுந்துள்ளது.