WHO : உலக சுகாதார நிறுவனம் தற்போது செவித்திறன் பாதிப்பு பற்றிய சில அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாம் பாட்டு கேட்பதற்கு பயன்படுத்தும் ஹெட் போன்களால் நம் காதுகளுக்கு அதிக ஆபத்து இருப்பதை நாம் ஒரு போதும் அறிந்திருக்கமாட்டோம். அப்படியே அறிந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் அதிக சத்தம் வைத்து கொண்டு பாடல்களை கேட்போம். இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் நமது செவித்திறன் பாதிப்படைந்து நமக்கு இருக்கும் கேட்கும் திறன் முற்றிலும் செயலிழந்து விடும்.
உலகம் முழுவதும் உள்ள 40 கோடி பேருக்கு செவித்திறன் பாதிப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் 20 சதவீதம் பேருக்கு மட்டும் காது கேட்கும் கருவி உள்ளதாக கூறுகிறார்கள் மீதம் உள்ளவர்கள் இதன் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது 217 மில்லியன் மக்கள் காது கேக்காமல் பாதிப்படைந்துள்ளனர். இது உலகமக்கள் தொகையில் சுமார் 21.52 சதவீதமாகும் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்து உள்ளது.
இது வருகிற 2050 ஆண்டில் இந்த எண்ணிக்கை படிப்படியாக 322 மில்லியனாக உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது போன்ற செவித்திறன் இழப்பு பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையிலும் அவர்களது குடும்பங்களிலும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துகிறது என் தெரிவிக்கின்றனர். மேலும், இதன் சிகிச்சைக்காக மட்டும் உலகளவில் சுமார் 21 கோடியே 80 லட்சத்திற்கும் மேல் செலவாகிறது என கண்டுப்பிடித்துள்ளனர்.
மேலும், அடுத்த 30 ஆண்டுகளில் இதனால் பாதிப்படையும் நபர்களில் ஒருவருக்கு காதில் புது வித பாதிப்பு ஏற்படலாம் எனவும் அது நமது எதிர்கால சந்ததியை கூட பாதிக்கலாம் எனவும் கணித்துள்ளனர். நாம் நமது பொழுது போக்கிற்காக கேட்க உபயோகிக்கும் ஹெட்போன்களின் தாக்கத்தை தற்போதாவது புரிந்து கொண்டு அதை குறைவாக உபயோகித்து வருங்கால சந்ததிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவே நாம் அமைய வேண்டும்.
எனவே, மொபைல் போன், ஹெட்போன்களை உபயோகிக்கும் போது குறைவான சத்தத்தை வைத்து கொண்டு குறைவான சமயம் மட்டுமே அதற்கென நாம் செலவழித்தால் அது போதுமானது. மிக முக்கியமாக நமது குழந்தைகளிடம் இது போன்ற ஹெட்போன்களை கொடுக்காமலும் அவர்களே அறியாமல் உபயோகித்தாலும் அதனால் விளையும் தீங்கை எடுத்து கூறி நாம் பாதுகாப்போம்.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…