ரஷ்யாவிற்கு ரோபோக்கள், தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்ய ஜப்பான் தடை விதித்துள்ளது.
உக்ரைனில் நடைபெற்ற ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா மீது ஜப்பான் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலை எதிர் கொள்வதற்காக உக்ரைனுக்கு டாங்கிகளை வழங்குவதாக ஜெர்மனியும் அமெரிக்காவும் முடிவு செய்ததை தொடர்ந்து ரஷ்யா , உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதிய பொருளாதாரத் தடைகளில், ரஷ்யாவின் இராணுவத் திறனை அதிகரிக்கப் பயன்படுத்தக்கூடிய பொருட்களை அதன் 49 நிறுவனங்களுக்கு அனுப்புவதை பிப்ரவரி 3 முதல் தடை செய்வதாக ஜப்பான் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட பட்டியலில் பீரங்கிகள், எக்ஸ்ரே ஆய்வு கருவிகள், எரிவாயு ஆய்வுக் கருவிகள் மற்றும் தடுப்பூசிகள், வெடிபொருட்கள் மற்றும் ரோபோக்கள் ஆகியவை அடங்கும்.
இர்குட் கார்பொரேஷன் (Irkut Corp), தரையிலிருந்து வான்வழி ஏவுகணைகளை தயாரிக்கும் நிறுவனமான எம்.எம்.ஸி.அவன்கார்ட் (MMZ Avangard) துணை பாதுகாப்பு மந்திரி மிகைல் மிஜின்ட்சேவ் மற்றும் நீதி மந்திரி கான்ஸ்டான்டின் சூசென்கோ உள்ளிட்ட ரஷ்யாவில் உள்ள மூன்று நிறுவனங்கள் மற்றும் 22 தனிநபர்களின் சொத்துகளையும் ஜப்பான் முடக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…