ரோபோக்கள் மற்றும் தடுப்பூசிகள் ஏற்றுமதி..! ரஷ்யாவிற்கு தடை விதித்தது ஜப்பான்..!

Default Image

ரஷ்யாவிற்கு ரோபோக்கள், தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்ய ஜப்பான் தடை விதித்துள்ளது.

உக்ரைனில் நடைபெற்ற ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா மீது ஜப்பான் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலை எதிர் கொள்வதற்காக உக்ரைனுக்கு டாங்கிகளை வழங்குவதாக ஜெர்மனியும் அமெரிக்காவும் முடிவு செய்ததை தொடர்ந்து ரஷ்யா , உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Russian missile attacks on Ukraine
11 killed in Russian missile attack on Ukraine [Image Source: Reuters]

புதிய பொருளாதாரத் தடைகளில், ரஷ்யாவின் இராணுவத் திறனை அதிகரிக்கப் பயன்படுத்தக்கூடிய பொருட்களை அதன் 49 நிறுவனங்களுக்கு அனுப்புவதை பிப்ரவரி 3 முதல் தடை செய்வதாக ஜப்பான் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட பட்டியலில் பீரங்கிகள், எக்ஸ்ரே ஆய்வு கருவிகள், எரிவாயு ஆய்வுக் கருவிகள் மற்றும் தடுப்பூசிகள், வெடிபொருட்கள் மற்றும் ரோபோக்கள் ஆகியவை அடங்கும்.

robots

இர்குட் கார்பொரேஷன் (Irkut Corp), தரையிலிருந்து வான்வழி ஏவுகணைகளை  தயாரிக்கும் நிறுவனமான எம்.எம்.ஸி.அவன்கார்ட் (MMZ Avangard) துணை பாதுகாப்பு மந்திரி மிகைல் மிஜின்ட்சேவ் மற்றும் நீதி மந்திரி கான்ஸ்டான்டின் சூசென்கோ உள்ளிட்ட ரஷ்யாவில் உள்ள மூன்று நிறுவனங்கள் மற்றும் 22 தனிநபர்களின் சொத்துகளையும் ஜப்பான் முடக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Japan bans exports 2

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Lottery Martin - Kanguva
childrens day (1)
rinku singh
Vaiko - Apollo Hospital
doctor balaji
Rajeev gandhi co-operative hospital
kanguva review