ஆப்கானிஸ்தானில் ஆளுநர் அலுவலகத்திற்குள் குண்டுவெடிப்பு- ஆளுநர் உட்பட 3 பேர் உயிரிழப்பு..!
ஆப்கானிஸ்தானில் ஆளுநர் அலுவலகத்திற்குள் வெடி விபத்தில், ஆளுநர் உட்பட 3 பேர் உயிரிழப்பு
குண்டுவெடிப்பு
ஆப்கானிஸ்தானின் பல்க் மாகாணத்தின் தலைநகரான மஸார்-இ ஷெரீப்பில் உள்ள ஆளுநர் அலுவலகத்திற்குள் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் தலிபான்களால் நியமிக்கப்பட்ட மாகாண ஆளுநர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆளுநர் உட்பட 3 பேர் உயிரிழப்பு
காவல்துறைத் தலைவரின் செய்தித் தொடர்பாளர் முகமது ஆசிப் வஜிரி கூறுகையில், பல்க் மாகாணத்தின் தலைநகரான மஸார்-இ ஷெரீப்பில் உள்ள ஆளுநர் அலுவலகத்திற்குள் ஏற்பட்ட வெடிவிபத்தில் தாவுத் முஸ்மல் மற்றும் இருவர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் கொராசன் மாகாணத்தில் இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படும் குழுவின் பிராந்திய துணை அமைப்பு தலிபானின் முக்கிய போட்டியாளராக உள்ளது.
ஆகஸ்ட் 2021 இல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதில் இருந்து தீவிரவாதக் குழு, ஆப்கானிஸ்தானில் அதன் தாக்குதல்களை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.