ஐரோப்பாவில் இரு நாடுகளை இணைக்கும் எரிவாயு குழாயில் வெடிப்பு.. பொதுமக்கள் வெளியேற்றம்..!
ஐரோப்பாவில் லிதுவேனியா மற்றும் லாட்வியாவை இணைக்கும் எரிவாயு குழாய் வெடித்து ஏற்பட்ட விபத்து காரணமாக அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஐரோப்பா : லிதுவேனியா மற்றும் லாட்வியாவை இணைக்கும் எரிவாயு குழாய் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்பால் ஏற்பட்ட தீப்பிழம்புகள் 50 மீட்டர் உயரம் வரை வளர்ந்தது. வடக்கு லிதுவேனியாவில் இந்த வெடிப்பு நடந்ததாக அந்நாட்டின் எரிவாயு பரிமாற்ற ஆபரேட்டர் ஆம்பர் கிரிட் தெரிவித்துள்ளது. மேலும் வெடிப்புக்கான காரணத்தை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் எனவும் தெரிவித்தது.
ட்விட்டரில் வெளியிடப்பட்ட வெடிப்புத் ஏற்பட்ட வீடியோவில் அப்பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிவதைக் காணமுடிகிறது. முன்னெச்சரிக்கையாக விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராம மக்களை வெளியேற்றும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்த வித காயங்களும் உயிரிழப்பும் ஏற்படவில்லை.
Reportedly, an explosion occurred on the gas pipeline in Lutuhyne, Luhansk region pic.twitter.com/Nobn067kxi
— Special Kherson Cat ???????????? (@bayraktar_1love) January 7, 2023