டொமினிகன் குடியரசு நாட்டில் வெடி விபத்து: 11 பேர் பரிதாபமாக பலி!
டொமினிகன் குடியரசு நாட்டின் தலை நகரத்தில் வெடி விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர், மேலும் 10 பேர் காணவில்லை என்றும், 50கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று ஜனாதிபதி லூயிஸ் அபினாடர் செவ்வாயன்று தெரிவித்தார்.
டொமினிகன் குடியரசு தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சான் கிறிஸ்டோபலின் வணிகப் பகுதியை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 11 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 59 பேரில் 37 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிப்புக்கான காரணம் கண்டறியப்படவில்லை, உயிரிழந்தவர்களில் நான்கு மாத குழந்தை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.