“உடனடியாக வெளியேறுங்கள்”! இலங்கையில் உள்ள இஸ்ரேலியருக்கு எச்சரிக்கை!
இலங்கையில் தெற்கு, மேற்கு கடலோர பகுதிகளில் வசித்து வரும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை : இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையே கடந்த ஒரு வருடமாகப் போரானது நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் ஹமாஸ் மற்றும் அவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்களை அடுத்தடுத்து குறிவைத்துத் தாக்கினார்கள்.
இதில், சமீபத்தில் கூட இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான யாஹ்யா சின்வார் உயிரிழந்தார். இதனால், இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் உச்சம் பெற்றுள்ளது.
இதன் எதிரொலியாக தற்போது இலங்கையில் கடலோர பகுதிகள் மற்றும் சுற்றுலாப் பகுதிகளிலிருந்து வரும் இஸ்ரேல் மக்களுக்குப் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதனால், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் இப்படி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இலங்கையில் உள்ள ஒரு சில முஸ்லீம் அமைப்புகளால், இலங்கையில் வசித்து வரும் மக்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கிறது. இதன் காரணமாக அங்கு உள்ள இஸ்ரேல் மக்கள் உடனடியாக இலங்கையிலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டுள்ளது.