சீனாவில் பரபரப்பு! கூட்டத்தில் காரை ஏற்றி 35 பேரை கொலை செய்த நபர்!
சீனாவில் கூட்டத்துக்குள் தாறுமாறாக காரை ஓட்டியதில் 35 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான் இன்று வழக்கம்போல் 80க்கும் மேற்பட்டோர் மையத்தில் உள்ள சாலையில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள். அப்போது, அந்த மையத்திற்குள் ஒரு சிறிய எஸ்யூவியை காரை ஒட்டிக்கொண்டு வேகமாக நபர் வந்தார்.
அங்குக் கூட்டமாக அவர்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருப்பதைப் பார்த்தும் காரை நிறுத்தாமல் வேண்டுமென்றே சாலையில் உடற்பயிற்சி செய்துகொண்டு இருந்தவர்களை வேகமாகக் காரை வைத்து மோதத் தொடங்கினார். அங்கிருந்தார்கள் தங்களுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அக்கம் பக்கத்தில் இருக்கும் பகுதிகளுக்கு ஓடவும் செய்தனர்.
கார் ஏறியதில் கீழே விழுந்த அவர்களின் அலறல் சத்தம் கேட்டுக்கூட அந்த நபர் தனது காரை நிறுத்தாமல் வேகமாகப் பலரையும் காரை வைத்துத் தாக்கிக் கொண்டே சென்றார். இந்த கொடூர சம்பவத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டு இருந்த 35 பேர் உயிரிழந்தனர். ர் 43 பேர் காயமடைந்தனர் என்று செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில், திடீரென அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஃபேன் என்ற குடும்பப்பெயரால் அடையாளம் காணப்பட்ட அந்த குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர். விசாரணை செய்ததில் அவருடைய வயது 62 இருக்கும் எனவும், அவர் தன்னுடைய மனைவியின் விவகாரத்து முடிவு காரணமாக இப்படியான முடிவை எடுத்ததாகவும் காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால், எதற்காக இந்த மாதிரி மோசமான சம்பவத்தில் ஈடுபட்டார் என்பது பற்றிய தெளிவான தகவல் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. தற்போது அவரிடம் அதற்கான விசாரணை தான் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், மக்கள் விடுதலை இராணுவம் (பிஎல்ஏ) ஏற்பாடு செய்திருந்த ஒரு பெரிய வானூர்தி நிகழ்ச்சி ஜுஹாயில் திறக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த விபத்து நடந்தது 35 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025
பாகிஸ்தானை விட நாங்க தான் கெத்து! முன்னாள் இந்திய வீரர் ஓபன் ஸ்பீச்!
February 22, 2025