Mexican Mayor [Image- Twitter/@LupitaJuarezH]
கடத்தல் வழக்கில் தொடர்புடைய மெக்சிகோவின் முன்னாள் மேயருக்கு 92 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஆறு சமூக தலைவர்களை கடத்திய வழக்கில், மெக்சிகோவின் முன்னாள் மேயருக்கு 92 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 62 வயதான ஜோஸ் லூயிஸ் அபார்கா, மெக்ஸிகோவின் தெற்கு மாநிலமான குரேரோவில் உள்ள இகுவாலா நகரில் ஆறு முக்கிய நபர்களை கடத்தியதற்காக அவருக்கு சிறைத்தண்டனை மற்றும் 920,700 பெசோக்கள் (சுமார் 52,000டாலர்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட நபர்களில் ஆர்டுரோ ஹெர்னாண்டஸ் கார்டோனா என்ற விவசாயத் தலைவர் ஒருவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 2014 இல் அபார்கா இகுவாலா மேயராக இருந்தபோது 43 மாணவர்கள் மேலும் காணாமல் போயுள்ளனர். அந்த ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு மத்திய மெக்சிகோவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…