கென்யா : மனிதர்களைப் போலவே யானைகளும் மற்ற யானைகளை பெயர் சொல்லி அழைப்பதாக கென்ய நாட்டின் ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. ஆம், மனிதர்கள் நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயரை வைத்திருப்போம், அதேபோல் யானைகள் மற்ற யானைகளை அடையாளம் காணவும் அழைக்கவும் பெயர்களைப் போலவே செயல்படும் குறிப்பிட்ட குரல்களைப் பயன்படுத்துகின்றன.
கென்யாவில் உள்ள ஆப்பிரிக்க சவன்னா யானைகளைக் கண்காணிக்கும் கொலராடோ ஸ்டேட் யுனிவர்சிட்டி (யுஎஸ்) டேவிட் மைக்கேல் பார்டோ, கர்ட் ஃப்ரிஸ்ட்ரப் மற்றும் ஜார்ஜ் விட்டெமியர் ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. யானைகளின் தொடர்பு முறைகளைப் புரிந்து கொள்வதற்காக அவை எழுப்பும் ஒலிகளைப் பதிவுசெய்து ஆய்வு செய்தனர்.
அதனோடி, அந்நாட்டின் இரண்டு காட்டு யானை மந்தைகளின் குரல்களை செயற்கை நுண்ணறிவு (AI) தொழிநுட்ப ஆய்வு வழிமுறையைப் பயன்படுத்தி ஆய்வு செய்ததில், டால்பின்கள் மற்றும் கிளிகள் எவ்வாறு ஒருவருக்கொருவர் உரையாற்றுகின்றனர் என்பது குறித்து உற்று நோக்கியுள்ளார்கள்.
மறுபுறம், யானைகள், யாரையும் பின்பற்றாத பெயர்களைப் பயன்படுத்திய முதல் மனிதரல்லாத விலங்குகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1986 முதல் 2022 வரை பதிவுசெய்யப்பட்ட யானை குரல்களை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, 100 யானைகளை ஆய்வு செய்ததில், அவை 469 விதமான ஒலிகளை எழுப்புவது தெரியவந்துள்ளது. அதில் 101 யானைகள் அழைப்பையும், 117 ஒன்றைப் பெறுவதையும் கண்டுள்ளனர்.
கொலராடோ ஸ்டேட் யுனிவர்சிட்டியின் சூழலியல் நிபுணர் மைக்கேல் பார்டோ கூற்றின்படி, யானைகள் தங்கள் குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்துவமான குரலை கொண்டிருப்பதாக நம்புகிறார். ஒவ்வொரு குறிப்பிட்ட யானையிடம் தகவல் பறிமாறும்போது ஒரே மாதிரியான ஒலிகளை எழுப்புகிறதாம். இந்த அழைப்புகள் மனிதப் பெயர்களுக்கு ஒப்பானதாகக் கருதப்படும் அளவுக்கு வேறுபட்டவை.
யானைகளை வழிநடத்துவது தலைவி யானை தான். தலைவி யானை உத்தரவு கொடுத்தால் பிற யானைகள் சொல்படி கேட்குமாம். தலைவி அழைக்கும்போது ஒவ்வொருவரையும் குறிப்பிட்ட பெயர் சொல்லி அழைக்கிறது என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அதாவது கூட்டத்திற்குப் பொதுவான உத்தரவைப் பிறப்பிக்காமல், ஒவ்வொரு யானைக்கும் தனித்தனியான உத்தரவுகளைக் கொடுத்து அவற்றைப் பின்பற்ற சொல்கிறது.
இதன் மூலம், யானைகள் ஒவ்வொருவரையும் தனியாக அடையாளப்படுத்தத் தனி ஒலியை வைத்திருக்கின்றன. இதற்கு அதாவது அவற்றுக்குப் பெயர் வைத்து அழைக்கின்றன என்பதாக எடுத்து கொள்ளலாம். இந்த கண்டுபிடிப்பு யானை சமூக கட்டமைப்புகளின் சிக்கலான தன்மையையும் அவற்றின் மேம்பட்ட அறிவாற்றல் திறன்களையும் எடுத்துக்காட்டுகிறது. யானைக் கூட்டங்களுக்குள் சமூகப் பிணைப்பைப் பேணுவதில் குரல் தொடர்புகளின் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது. நேச்சர் எக்காலஜி & எவல்யூஷன் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒலி எழுப்புதல் :
யானைகள் பலவிதமான ஒலிகளை உண்டாக்குகின்றன, இதில் கர்ஜனைகள், கூவல்கள், மற்றும் டிரம்பெட் ஒலிகள் அடங்கும். இந்த ஒலிகள் கிலோமீட்டர்கள் தொலைவுக்கு செல்லக்கூடியவை.
சில ஒலிகள் குறுக்கெழுவாய் (infrasonic) வடிவிலானவை, இது மனிதர்களால் கேட்கமுடியாத ஒலி அதிர்வுகளை உண்டாக்கும்.
தொடர்பு கொள்ளுதல்:
யானைகள் ஒலியை மட்டும் பயன்படுத்தாமல், உடல் மொழி, தொடுதல், மற்றும் மண்ணின் அதிர்வுகளையும் பயன்படுத்துகின்றன. தொடுதல் மூலம் மற்றொரு யானையின் துன்பம் அல்லது மகிழ்ச்சியை உணர முடியும்.
பெயர் கூறுதல்:
ஆய்வின்படி, யானைகள் தனித்தனி யானைகளின் ஒலிகளை அடையாளம் காணக்கூடியவை என்று சுட்டிகாட்டியுள்ளன. இதனால், ஒரு யானை மற்றொரு யானையை குறிப்பிட்ட பெயரால் அழைக்க முடியும். இது சமூக உறவுகளை பராமரிக்கவும், குழு ஒருமைப்பாட்டை மேம்படுத்தவும் உதவுகின்றது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…