தப்பிய விமானம்! ஜப்பானில் வெடித்த இரண்டாம் உலகப் போர் குண்டு!
விமான நிலையத்தில் குண்டுகள் வெடித்ததால் உடனடியாக இந்த விமான நிலையத்திற்கு வரும் அத்தனை விமானங்களையும் வேறு விமான நிலையத்திற்கு அனுப்பி விடப்பட்டன.
மியாசகி : இரண்டாம் உலகப்போர் சமயத்தில், ஜப்பான் மீது வலுவான விமானப்படை இருந்தும் அமெரிக்கா அணுகுண்டை வீசியது. இதனால், ஜப்பான் மீண்டு வருவதற்கு பல வருடங்கள் ஆனது. மேலும், இரண்டாவது உலகப்போர் சமயத்தில் ஜப்பான் அண்டை நாடுகளில் இருந்த ராணுவ தளத்திற்கு எளிதாக ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் கொண்டு செல்வதற்கு மியாசகி விமான நிலையம் மிகவும் உதவியாக இருந்தது.
இதனால், அந்த தொடர்பை முற்றிலும் தடுப்பதற்கு அமெரிக்கா இந்த விமான நிலையம் மீதும் சரமாரியான குண்டுகளை அப்போது வீசியது. இதில் ஒரு சில குண்டுகள் அப்படியே மண்ணுக்கு அடியில் புதைந்து போனது. அதன் பிறகு போர் முடிந்ததால், இந்த மியாசகி விமான நிலையத்தை ஜப்பான் வணிக ரீதியாக பயன்படுத்த தொடங்கியது.
இப்படி இருக்கையில் பல வருடங்கள் கழித்து நேற்று, மியாசகி விமான நிலையத்தில் விமான ஓடு தளத்தில் திடீரென பயங்கரமான சத்தத்துடன் குண்டு ஒன்று வெடித்திருக்கிறது. இது இரண்டாம் உலகப்போர் சமயத்தில் அமெரிக்கா ஜப்பான் மீது போட்ட குண்டு எனவும், மண்ணிற்குள் புதைந்திருந்தது தான் தற்போது வெடித்துள்ளது எனவும் ஜப்பான் தெரிவித்துள்ளது.
மேலும், உடனடியாக இந்த விமான நிலையத்திற்கு வரும் அத்தனை விமானங்களையும் வேறு விமான நிலையத்திற்கு அனுப்பி விடப்பட்டன. பின்னர் ஜப்பான் ராணுவம், வெடி விபத்து குறித்து ஆய்வை தொடங்கியது. அந்த ஆய்வில் வெடித்தது இரண்டாம் உலகப்போர் காலத்தில், அமெரிக்கா வீசிய குண்டு என்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும், வெடி விபத்து நடந்த இடம் உடனடியாக சரி செய்யப்பட்டு தற்போது மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதனால், இந்த விமான நிலையத்தில் இன்னும் வெடிக்காத குண்டுகள் ஏதும் மீதம் உள்ளதா? எனவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ஒருவேளை இருந்தால் அது பத்திரமாக வெடிக்காத வண்ணம் மீட்கப்பட்டு அகற்றிவிடுவோம் என ஜப்பான் தெரிவித்துள்ளது. தற்போது குண்டு வெடித்தபோது, விமானங்கள் எதுவும் அந்த ஓடுதளத்தில் இருக்கவில்லை. இதனால், பெரும் பொருடசேதமோ இல்லை உயிர் சேதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.