இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி பதவியேற்பு.!
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக, லாஸ் ஏஞ்சல்ஸின் முன்னாள் மேயர் எரிக் கார்செட்டி அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.
அமெரிக்க செனட், அமெரிக்காவின் முக்கிய இராஜதந்திர பதவியை நிரப்ப இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இடைவெளியை முடிவுக்கு கொண்டு வந்து, இந்த மாத தொடக்கத்தில் கார்செட்டியின் நியமனத்தை உறுதிசெய்தது.
துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தலைமையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், எரிக் கார்செட்டி இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் அவரது மனைவி ஏமி வேக்லேண்ட், தந்தை கில் கார்செட்டி, தாய் சுகே கார்செட்டி மற்றும் மாமியார் டீ வேக்லேண்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த ஜனவரி 2021 முதல் இந்தியாவில் அமெரிக்க தூதர் பதவி காலியாக உள்ளது, அமெரிக்க-இந்திய உறவுகளின் வரலாற்றில் மிக நீண்ட கால வெற்றிடம் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அரசாங்கம் மாற்றத்தின்போது, கடைசி அமெரிக்க தூதராக இருந்த கென்னத் ஜஸ்டர், பதவி விலகினார் அதன்பின் அந்த பதவி காலியாக இருந்தது.