ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் – இங்கிலாந்து அரசு
சிங்கிள் ஷாட் ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் !
உலகம் முழுவதும் கொரோனா காட்டுத்தீ போல் பரவி உயிர்களை பலி வாங்கி வந்த நிலையில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
மேலும் தற்போது ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் சிங்கிள் ஷாட் ஜான்சன் & ஜான்சன் கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டறிந்துள்ளது. இதனை பயன்படுத்த இங்கிலாந்து அரசு இன்று ஒப்புதல் அளித்ததாக மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகள் ஒழுங்குமுறை நிறுவனம் (எம்.எச்.ஆர்.ஏ) அறிவித்தது.
மேலும் “இது இங்கிலாந்தின் மிகப்பெரிய வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்திற்கு மேலும் ஊக்கமளிக்கிறது என்றும், இது ஏற்கனவே 13,000 க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாகவும், இதனுடன் மோசமான கொரோனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாக்க உதவும் நான்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளை இப்போது நாங்கள் பெற்றுள்ளோம்” என்று இங்கிலாந்து சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் கூறியுள்ளார்.
இதனையடுத்து 20 மில்லியன் டோஸ் தடுப்பூசிக்கு பிரிட்டன் உத்தரவிட்டுள்ளது. மேலும் கடுமையான சோதனைக்குரிய கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதில் இந்த தடுப்பூசி 72 சதவீதம் பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டது என்று அமெரிக்க சோதனை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.