லண்டனில் உள்ள எம்மா டேவிஸ் என்ற பெண் குமட்டல் மற்றும் வாந்தி மீதுள்ள அதிக பயம் காரணமாக என்பதால் இரண்டு ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் அவல நிலையில் உள்ளார்.
லண்டனில் வசிக்கும் 35 வயதான எம்மா டேவிஸ் என்ற பெண், எமெட்டோபோபியாவால்(emetophobia) பாதிக்கபட்டுள்ளார்.அதாவது எமெட்டோபோபியா என்பது வாந்தியெடுத்தல் அல்லது மற்றவர்கள் வாந்தி எடுப்பதை பார்ப்பதினால் வரும் ஒருவித பய உணர்வாகும்.
இதனைத்தொடர்ந்து வாந்தியைப் பற்றி மிகவும் பயம் இருப்பதால், நண்பர்களுடன் பழகவோ அல்லது தனது ஒன்பது வயது மகனுடன் வெளியே செல்ல முடியாமல் 2 ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளார்.
இதுகுறித்து எம்மா டேவிஸ் ஆங்கில செய்தியாளரிடம் கூறுகையில் , “மக்கள் பலர்,ஏதாவது நோயுற்றிருந்தால் பயப்படுகிறார்கள், இருப்பினும், அது அவர்களின் வாழ்க்கையை பெரிய அளவில் பாதிப்பதில்லை.
ஆனால்,வாந்தி எடுப்பது பற்றி நான் பயந்தால் அது எனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் பாதிக்கிறது.இரவு உணவை சமைப்பது அல்லது சாப்பிடுவதனால் கூட உணவின் வாசனையால் வாந்தி வரும் என்பதால் நான் காலை மற்றும் இரவு உணவை சாப்பிடமாட்டேன்.அதற்குப் பதிலாக நான் தேநீர் மட்டுமே அருந்துவேன்.
கடந்த சில ஆண்டுகளில் நான் சரியாக சிரிக்கவில்லை.இதனால் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளேன்.இதன்காரணமாகவே நான் என் அறையை விட்டு வெளியேறவில்லை.மேலும்,இது என் வாழ்க்கையைப் பற்றி வெளியே செல்ல முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது”,என்று கவலயுடன் கூறினார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…