Categories: உலகம்

ஹமாஸை ஒழிப்பது தான் ஒரே வழி.! இஸ்ரேல் பயணம் குறித்து எலான் மஸ்க் கருத்து.!

Published by
மணிகண்டன்

கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் தரப்பில் இருந்து சுமார் 1400 பேர் உயிரிழந்தனர். மேலும் கிட்புட்ஸில் இருந்த பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களை பிணை கைதிகளாக கடத்தி சென்றனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக  இஸ்ரேல் ராணுவம் , ஹமாஸ் அதிகம் இருக்கும் காசா நகர் மீது தொடர் தாக்குதலை நடத்தினர்.

இந்த தாக்குதல்களில் சுமார் 14 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – ஹமாஸ் இரு தரப்பு போரை நிறுத்த கோரி பல்வேறு நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பில் இருந்தும் பிணை கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். பிணை கைதிகள் விடுவிக்கப்பட்டு வருவதால் 4 நாள் போர் நிறுத்தம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம் – மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு..!

இந்நிலையில் தான், உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க், நேற்று இஸ்ரேல் நாட்டிற்கு சென்றார். அங்கு போரால் பாதிக்கப்பட்ட  கிப்புட்ஸில் போர் பாதிப்புக்கு உள்ளான இடங்களை , அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் இணைந்து பார்வையிட்டார்.

அதன் பிறகு இந்த பயணம் குறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் எலான் மஸ்க் பதிவிடுகையில், போர் பாதிப்புகளை, அதன் படுகொலை காட்சிகளை நேரில் பார்ப்பது மனதை பதற செய்கிறது. என்றும், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிப்பதை தவிர இஸ்ரேல் நாட்டிற்கு வேறு வழியில்லை என்றும் பதிவிட்டார்.

அடுத்ததாக எலான் மஸ்க் இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். இது குறித்து இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிடுகையில், “ஆன்லைனில் அதிகரித்து வரும் யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு (இஸ்ரேலிய யூதர்கள்) எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தை மஸ்க்கிடம் குறிப்பிட்டு காட்ட வேண்டும் என்று இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Recent Posts

எப்படி மன்னிப்பு கேட்பேன் என தெரியவில்லை… உணர்ச்சிவசப்பட்ட காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா!

டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

32 minutes ago

ராஜினாமா செய்ய தயாரா? பாஜகவுக்கு சவால் விட்ட செல்வப்பெருந்தகை!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில்…

57 minutes ago

7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர் பாடங்கள் நீக்கம்.., கும்பமேளா சேர்ப்பு?

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…

2 hours ago

“தமிழ்நாட்டில் எந்த விதத்திலும் மதவாதம் நுழைய முடியாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…

3 hours ago

காஷ்மீர் தாக்குதல் : பிபிசி தொலைக்காட்சி மீது மத்திய அரசு அதிருப்தி.!

டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…

3 hours ago

தமிழ்நாடு போலீசுக்கு நாங்க என்னென்ன செய்திருக்கோம் தெரியுமா? முதலமைச்சர் போட்ட பட்டியல்…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…

3 hours ago