ஹமாஸை ஒழிப்பது தான் ஒரே வழி.! இஸ்ரேல் பயணம் குறித்து எலான் மஸ்க் கருத்து.!
கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் தரப்பில் இருந்து சுமார் 1400 பேர் உயிரிழந்தனர். மேலும் கிட்புட்ஸில் இருந்த பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களை பிணை கைதிகளாக கடத்தி சென்றனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் , ஹமாஸ் அதிகம் இருக்கும் காசா நகர் மீது தொடர் தாக்குதலை நடத்தினர்.
இந்த தாக்குதல்களில் சுமார் 14 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – ஹமாஸ் இரு தரப்பு போரை நிறுத்த கோரி பல்வேறு நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பில் இருந்தும் பிணை கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். பிணை கைதிகள் விடுவிக்கப்பட்டு வருவதால் 4 நாள் போர் நிறுத்தம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம் – மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு..!
இந்நிலையில் தான், உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க், நேற்று இஸ்ரேல் நாட்டிற்கு சென்றார். அங்கு போரால் பாதிக்கப்பட்ட கிப்புட்ஸில் போர் பாதிப்புக்கு உள்ளான இடங்களை , அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் இணைந்து பார்வையிட்டார்.
அதன் பிறகு இந்த பயணம் குறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் எலான் மஸ்க் பதிவிடுகையில், போர் பாதிப்புகளை, அதன் படுகொலை காட்சிகளை நேரில் பார்ப்பது மனதை பதற செய்கிறது. என்றும், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிப்பதை தவிர இஸ்ரேல் நாட்டிற்கு வேறு வழியில்லை என்றும் பதிவிட்டார்.
அடுத்ததாக எலான் மஸ்க் இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். இது குறித்து இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிடுகையில், “ஆன்லைனில் அதிகரித்து வரும் யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு (இஸ்ரேலிய யூதர்கள்) எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தை மஸ்க்கிடம் குறிப்பிட்டு காட்ட வேண்டும் என்று இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.