அவதூறு வழக்கைத் தீர்க்க 10,000 டாலர் கொடுக்க முன்வந்த எலான் மஸ்க்.!

Elon Musk

தனது மீதான அவதூறு வழக்கைத் தீர்க்க 10,000 அமெரிக்க டாலர் கொடுக்க முன் வந்துள்ளார் எலான் மஸ்க்.

இந்திய-அமெரிக்க விமர்சகர் ரந்தீப் ஹோதியால் தனக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கைத் தீர்ப்பதற்கு எலோன் மஸ்க் 10,000 அமெரிக்க டாலரை செலுத்த ஒப்புக்கொண்டார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில், தொழிற்சாலையைப் பின்தொடர்ந்து, அதன் ஊழியர்களைத் துன்புறுத்தியதாகக் கூறி, ஹோதிக்கு எதிராக மஸ்க் புகார் தொடுத்தார். பின்னர், ஹோதி அந்த குற்றச்சாட்டுகளை மறுக்க, டெஸ்லாவும் தனது நீதிமன்ற புகாரை கைவிட்டது.

இதனை தொடர்ந்து, விமர்சகர் ஹோதி 2020-ல் எலான் மஸ்க் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். மஸ்க்கின் பொது விமர்சனம் ஆன்லைன் வெறுப்பு பிரச்சாரத்தை தூண்டியது. இந்த நிலையில், இறுதியாக இந்த வழக்கைத் தீர்ப்பதற்கு எலோன் மஸ்க் $10,000 செலுத்த முன் வந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்