$4 பில்லியன் மதிப்புள்ள டெஸ்லா பங்குகளை விற்றுள்ள எலான் மஸ்க்.!
டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க், கிட்டத்தட்ட $4 பில்லியன் மதிப்புள்ள 19.5 மில்லியன் டெஸ்லா பங்குகளை விற்றுள்ளார்.
டெஸ்லாவின் தலைமை அதிகாரி மற்றும் ட்விட்டரின் புதிய தலைவர் எலான் மஸ்க், $3.95 பில்லியன் மதிப்புள்ள 19.5 மில்லியன் டெஸ்லாவின் பங்குகளை விற்றுள்ளார். ஏற்கனவே ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் $15.4 பில்லியன் மதிப்புள்ள அதன் பங்குகளை விற்றார், இதன் மூலம் மொத்தமாக டெஸ்லாவின் $20 பில்லியன் பங்குகளை மஸ்க் விற்றுள்ளார்.
ஆகஸ்ட் மாதத்தில் டெஸ்லா பங்குகளை விற்க நேரிட்ட போது, இனி டெஸ்லாவின் எந்த பங்குகளையும் விற்கப்போவதில்லை என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டரின் ஒப்பந்தத்தை $44 பில்லியனுக்கு முடித்து அதன் தலைவரான பிறகு மஸ்க் ட்விட்டரில் நிறைய அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ட்விட்டரின் 50% ஊழியர்களை நீக்கியது, ப்ளூ டிக்கிற்கு மாதம் $8 செலுத்த வேண்டும் என அறிவித்தார். மஸ்க்,ட்விட்டரில் உள்ள அனைத்து போலி கணக்குகளையும் நீக்குவேன் என்று கூறியிருந்தார்.