பெர்னார்ட் அர்னால்ட்டை, பின்னுக்கு தள்ளி மீண்டும் உலகின் பணக்காரர் ஆனார் எலான் மஸ்க்.!
லூயிஸ் உட்டன் தலைமை நிர்வாகி, பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்கு தள்ளி மீண்டும் எலான் மஸ்க், உலகின் பணக்காரர் ஆனார்.
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், கடந்த புதன்கிழமை உலகின் பணக்காரர் என்ற பட்டத்தை லூயிஸ் உட்டன் தலைமை நிறுவனமான எல்விஎம்ஹெச்(LVMH) இன் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட்டிடம் இழந்திருந்தார். உலக பணக்காரர்களின் நிகர செல்வ மதிப்பைக் கண்காணிக்கும் ஃபோர்ப்ஸ் பட்டியலின்படி மஸ்க், அர்னால்ட்டை விட சொத்து மதிப்பில் பின்தங்கி இருந்தார்.
தற்போது மீண்டும் பெர்னார்ட் அர்னால்ட்டை விட அதிக சொத்து மதிப்பைப் பெற்று மஸ்க் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி உலகின் பணக்காரர் ஆகியிருக்கிறார். மஸ்கின் சொத்து தற்போது 185.4 பில்லியன் டாலரும், அர்னால்ட்டின் சொத்து மதிப்பு 184.7 பில்லியன் டாலராகவும் உள்ளது.