அமெரிக்கா : அமெரிக்கா அதிபருக்கான தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்பும், உலக பணக்காரர்களுள் ஒருவரான எலான் மஸ்கும் இணைந்து நடனம் ஆடும் வீடியோவை எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் இந்த ஆண்டின் இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் அதிபர் ட்ரம்ப்பும், தற்போதைய துணை பிரதமரான கமலா ஹாரிஸும் அதிபர் தேர்தலில் களம் காணவுள்ளனர். இதனால் அங்குத் தேர்தல் களம் சூடு பிடித்து இருக்கிறது. பல தொழிலதிபர்கள் இரு தரப்பினர்களுக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதில், பெரும் அளவு ஆதரவு என்பது ட்ரம்ப் பக்கமே இருந்து வருகிறது.
உலக பணக்காரர்களின் ஒருவரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் இந்த தேர்தலில் ட்ரம்ப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். இதன் விளைவாகச் சமீபத்தில் எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் ஸ்பெஸில் (Space) நேர்காணல் செய்தார். இந்த நேர்காணலில் உலகம் முழுவதும் உள்ள 12 லட்சத்திற்கும் மேற்பட்ட எக்ஸ் பயனர்கள் கேட்டனர். இது போலப் பல விதமாக டொனால்ட் ட்ரம்ப்பை அவர் விளம்பரப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில், அவரும் டொனல்டு ட்ரம்ப்பும் ‘பீ கீஸ்’ என்ற மியூசிக் ஆல்பத்தின் ‘ஸ்டேயிங் அலைவ்’ என்ற ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது போல ஒரு AI வீடீயோவை பகிர்ந்திருந்தார். மேலும், அந்த பதிவில், “இது எங்களை வெறுப்பவர்கள் AI என்று கூறுவார்கள்” என்று நக்கலாக அந்த வீடியோவுடன் பதிவிட்டிருந்தார்.
சமீபத்தில் அந்த எக்ஸ் தளத்தில் வெளியான ஸ்பேஸ் நேர்காணல் கூட 12 லட்சம் பார்வையாளர்களைத் தாண்டி வைரலாகி இருந்தது. ஆனால், நேற்று எலான் மஸ்க் வெளியிட்டிருந்த இந்த வீடியோ பதிவானது தற்போது 80 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…