நாய்க்கு பதில் குருவி…டிவிட்டர் லோகோவை மீண்டும் மாற்றிய எலான் மஸ்க்.!

Default Image

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அக்டோபர் 27, 2022 அன்று டிவிட்டரை பணம் கொடுத்து வாங்கி தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். அதில் இருந்து டுவிட்டரில் அவர் அவ்வப்போது பல மாற்றங்களை கொண்டு வருகிறார்.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டிவிட்டர் ஹோம் பேஜில் பறவை லோகோவுக்கு பதில், சமூக வலைதளங்களில் பிரபலமான (மீம்) சீம்ஸ் நாய் படம் லோகோவாக மாற்றி இருந்தார்.  இது குறித்து,யனர்கள் பலரும் எலான் மஸ்க்கை டேக் செய்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், தற்போது எலான் மஸ்க் மீண்டும் பழையபடி ட்விட்டரின் லோகாவாக நாய்க்கு பதில் மீண்டும் குருவியை மாற்றியுள்ளார்.விமர்சனம்  எழுந்த நிலையில் Dogecoin கிரிப்போ கரன்ஸியின் லோகோவாக இருந்த நாய் படத்தை மாற்றியுள்ளார்.

மேலும், இந்த நாய் ‘Doge coin’ எனும் கிரிப்டோகரன்சி லோகோவின் ஒரு பகுதியாகும். Doge coin லோகோவை ட்விட்டரில் பயன்படுத்தியதை அடுத்து, டோஜ்காயின் மதிப்பு 30% உடனடியாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்