அமெரிக்க ஆன்லைன் தளத்தை வாங்கும் எலான் மஸ்க்.!
அமெரிக்க ஆன்லைன் தளமான சப்ஸ்டேக்-ஐ வாங்கும் விருப்பத்தை எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டெஸ்லாவின் நிறுவனரும் ட்விட்டரின் புதிய தலைவருமான எலான் மஸ்க், அமெரிக்காவின் ஆன்லைன் தளமான சப்ஸ்டேக்-ஐ(Substack) வாங்குவதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளார். சப்ஸ்டேக் (Substack) என்பது சந்தா அடிப்படையில் எழுத்தாளர்கள் மற்றும் போட்காஸ்ட் துறையில் சுதந்திரமாக தங்களது படைப்புகளை வெளியிடும் ஒரு தளமாகும்.
ட்விட்டர் பயனர் ஒருவர் மஸ்க்கிடம், சப்ஸ்டாக்கை வாங்குவது மற்றும் ட்விட்டருடன் இரண்டு தளங்களையும் இணைப்பது அர்த்தமுள்ளதாக இருக்குமா? என்று கேட்டிருந்தார். ட்விட்டர் மற்றும் சப்ஸ்டாக்கின் சேர்க்கை கார்ப்பரேட் ஊடகங்களுக்கு பெரிய போட்டியை உருவாக்கும் என்று பயனர் கூறினார்.
அதற்கு பதிலளித்த மஸ்க், சப்ஸ்டாக்கை வாங்கும் யோசனைகளை வரவேற்பதாக கூறியுள்ளார். இதனால் விரைவில் மஸ்க், சப்ஸ்டாக்கை வாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.