ட்விட்டரின் சி.இ.ஓ ஆகிறார் எலான் மஸ்க்.!
கடந்த வாரம் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் $44 பில்லியனுக்கு வாங்கிய எலான் மஸ்க் அதன் சி.இ.ஓ ஆக பணியாற்ற இருக்கிறார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், கடந்த வாரம் ட்விட்டரை வாங்கிய பிறகு அதன் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிர்வாகி அடங்கிய குழுவைக் கலைத்துவிட்டு நிர்வாகத்தின் ஒரே இயக்குநராக ஆகப் பொறுப்பேற்றார்.
ட்விட்டரின் தலைமை நிர்வாகி பராக் அகர்வாலை பதவி நீக்கம் செய்த பிறகு ட்விட்டரின் தலைமை நிர்வாகியாக(CEO), எலான் மஸ்க் பணியாற்ற இருக்கிறார். எலான் மஸ்க் ஏற்கனவே நடத்திக்கொண்டிருக்கும் 4 கம்பெனிகளான ஸ்பேஸ்-எக்ஸ், டெஸ்லா, நியூராலிங்க் மற்றும் தி போரிங் கிற்கு பிறகு ட்விட்டர் நிறுவனமும் தற்போது மஸ்க் வசம் வந்திருக்கிறது.
முன்னதாக எலான் மஸ்க், தனது ட்விட்டர் பயோ வில் சீஃப் ட்விட்(Chief Twit) என்று பதிவிட்டிருந்தார். மேலும் ட்விட்டரில் அதிகாரபூர்வ கணக்கை குறிக்கும் ப்ளூ டிக் அம்சத்திற்கு இனி மாதம், $ 20 வசூலிக்கப்போவதாகவும் தகவல் வெளியாகிய நிலையில் அதற்கு பதிலளித்த மஸ்க் இதன் மூலம் போலிக்கணக்குகளை ட்விட்டரில் இருந்து அகற்ற எடுத்திருக்கும் ஒரு முயற்சி என்று கூறியுள்ளார்.