எலான் மஸ்க் : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும் எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கூறியுள்ளார். அமெரிக்காவின் போர்ட்டரிகோ நாட்டில் தேர்தல் நடந்தபோது, வாக்கு எண்ணிக்கை சரியாக இல்லை எனவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இந்த சூழலில், எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இதனை சுட்டிகாட்டும் விதமாக ” மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்கவேண்டும். ஏனென்றால், இந்த இயந்திரங்களை மனிதர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவால் ஹேக் செய்யப்படும் சாத்தியங்கள் அதிகமாக இருக்கிறது” என கூறியுள்ளார். இவருடைய பதிவி வைரலாகி வருகிறது.
எலான் மஸ்க் கூறிய கருத்தை ஆதரித்திருக்கும் வகையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் “இந்தியாவில் EVMகள் (மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்) ஒரு கருப்பு பெட்டி. அவற்றை யாரும் ஆராய அனுமதிக்கப்படுவதில்லை. நமது தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை குறித்து கடுமையான கவலைகள் எழுப்பப்படுகின்றன.நிறுவனங்கள் பொறுப்புக்கூறல் இல்லாதபோது ஜனநாயகம் ஒரு ஏமாற்று நாடகமாக மாறி, மோசடிக்கு ஆளாகிறது” என கூறியுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…