இலங்கை அதிபர் தேர்தல் ! தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்..!

Srilanka President Election

இலங்கை :  கடந்த 2022-ம் ஆண்டு இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக மக்களுக்குள் மிகப்பெரிய புரட்சி வெடித்தது. இதனை தொடர்ந்து அப்போது இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். மேலும், தனது பதவியையும் ராஜினாமா செய்தார். இதனால் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்று கொண்டார்.

தற்போது, அதிபராக இருக்கும் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், அடுத்த அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இலங்கை அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் 17ம் தேதியில் இருந்து அக்டோபர் 16-ம் தேதிக்குள் நடத்தப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தேர்தல் நடைபெறும் தேதியை இலங்கை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது. இலங்கையில் வரும் செப்டம்பர் 21-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.மேலும், ஆகஸ்ட் 15 முதல் இந்த தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நடைபெற இருக்கும் இந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கவும், இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்