கையில் காசு இல்லை ,செய்ய வேலை இல்லை தங்க இடமில்லாத காரணத்தால் ஆயுள் தண்டனை வாங்கிய முதியவர்!
- ஜெர்மனியில் 62 வயதுடைய முதியவர் செய்ய வேலையில்லாமல் தங்க இடமில்லாமல் இருந்துள்ளார்.இதனால் ஏதாவது செய்துவிடலாம் என்று விபத்து ஏற்படுத்தியுள்ளார்.
- விபத்துக்குள்ளாகிய நபர் இறக்கவில்லையென்றாலும் இந்த முதியவரின் நிலையை உணர்ந்த நீதிபதி அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளார்.
ஜெர்மனியில் உள்ள மொஞ்சங்கடபெஸ் என்ற இடத்தில் வசித்து வந்தவர் எபெர்ஹார்ட் என்ற 62 வயதுடைய முன்னாள் அறிவியலாளர் ஆவார்.இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது வயதின் காரணமாக வேலையை இழந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் சும்மாவே இருந்ததால் கையில் சேமித்து வைத்திருந்த பணம் முழுவதையும் சுற்றுலா சென்று செலவு செய்துள்ளார்.பின்னர் கையில் வைத்திருந்த பணம் முழுவதும் தீர்ந்ததன் காரணாமாக வேறு வழியில்லாமல் காரிலேயே வசித்து வந்துள்ளார்
பின்னர் அவரின் ஓட்டுநர் உரிமையும் காலாவதியானதன் காரணமாக இனி நம்மால் ஏதும் செய்ய முடியாது என்ற காரணத்தால் ஏதாவது குற்றம் செய்துவிட்டு பேசாமல் சிறைக்கு சென்றிடலாம் என்று எண்ணியுள்ளார்.
இதன் காரணமாக சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு நபரை காரை வைத்து இடித்துள்ளார். இந்நிலையில் அந்த நபர் காயங்கள் ஏற்பட்டதன் காரணமாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் எபெர்ஹார்ட்டை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.பின்னர் எதற்காக இவ்வாறு செய்தீர்கள் என்று நீதிபதி எபெர்ஹார்ட்டை விசாரித்துள்ளார்.
அதற்கு எபெர்ஹார்ட் என்னால் இனி எதுவும் செய்ய முடியாது ஏதாவது குற்றம் செய்துவிட்டு உள்ளே வந்து ஆயுள் கைதியாக இருந்திடலாம் என்ற எண்ணத்திலேயே இவ்வாறு செய்தேன் என்று கூறியுள்ளார்.
இதன் காரணமாக நீதிபதி எபெர்ஹார்ட்க்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். ஆனால் பொதுவாக ஆயுள் தண்டனை விபத்தில் யாரேனும் இறந்துவிட்டால் மட்டுமே விபத்து ஏற்படுத்தியவருக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.