ஈரானில் வீட்டில் தயாரிக்கப்பட்ட மது அருந்தி 8 பேர் உயிரிழப்பு
ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் வீட்டில் தயாரித்த மதுபானத்தை குடித்து 8 பேர் உயிரிழந்துள்ளார்கள்.மேலும் 51 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வீட்டில் வைத்து மதுபானம் தயாரித்து விற்றவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் எட்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் .இச்சம்பவத்தை பற்றி சுகாதார அதிகாரி கொடுத்த பேட்டியில் , சிகிச்சை பெற்று வரும் 51 பேரில் பதினேழு பேர் ஆபத்தான நிலையிலும் 30 பேர் டயலாசிஸ் செய்து வருகிறார்கள்.
மெத்தனால் பொதுவாக உறைதல் எதிர்ப்பு, கரைப்பான்கள் மற்றும் எரிபொருளைத் தயாரிக்கப் பயன்படுகிறது, ஆனால் சில சமயங்களில் ஆல்கஹால் உள்ளடக்கத்தை அதிகரிக்க சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் ஸ்பிரிட்களில் சேர்க்கப்படுகிறது. சிறிய அளவில் கூட உட்கொண்டால், அது குருட்டுத்தன்மை அல்லது மரணத்தை ஏற்படுத்தும்.
மேலும் சமீபத்திய ஆண்டுகளில் ஈரான் மக்கள் மெத்தனால் கலந்த மதுபானத்தை அதிகமாக அருந்தி ஆயிரக்கணக்காகவர்கள் உயிர் இழந்து இருக்கிறார்கள்.இதற்கு ஆல்கஹால் அருந்தினால் கொரோனா தொற்று பரவாது என்ற பொய்யான தகவலின் மீது கொண்ட நம்பிக்கையே காரணம்.
மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈரானின் சுகாதார அமைச்சகம் 500 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளார்கள் மற்றும் 5000 க்கும் மேற்பட்டவர்கள் விஷத்தினால் பாதிக்கபட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.