பாகிஸ்தானில் பொருளாதார இழப்பு 18 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது!!
பாகிஸ்தானில் வெள்ளத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை மற்றும் வெள்ள பெருக்கு காரணமாக 1000க்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்த கடுமையான வெள்ளத்தால் அதிகப்படியான பொருளாதர சேதத்தையும் பாகிஸ்தான் கண்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வெள்ளத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளின் மதிப்பு சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
வெள்ளத்திற்குப் பிறகு விவசாயத்தின் வளர்ச்சி மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளம் 8.25 மில்லியன் ஏக்கரில் பயிர்களை அழித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.