மியான்மரில் கட்டடங்கள், ரயில் நிலையத்தை மிரள வைத்த நிலநடுக்கம்.! நெஞ்சை பதறவைக்கும் கோரக் காட்சிகள்…

மியான்மர், தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாக அங்குள்ள கட்டடங்கள் நொறுங்கி விழும் கோரக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

magnitude earthquake Myanmar

பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் (7.7, 6.4) கோர காட்சிகள் வெளியாகி மனதைப் பதற வைக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் ஐந்து நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இடிபாடுகளில் சிக்கி இதுவரை 100 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 200-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பெரிய பெரிய கட்டடங்கள் தரைமட்டமானதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மேல் மியான்மரில் உள்ள சாகிங், மண்டலே, கியூக்சே, பைன் ஓ ல்வின் மற்றும் ஷ்வெபோ உள்ளிட்ட பல நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இப்பொது, நிலநடுக்கங்கள் காரணமாக அங்குள்ள கட்டடங்கள் நொறுங்கி விழும் கோரக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சதுசாக் பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வந்த 34 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், குறைந்தது வேலை செய்து கொண்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள் 43 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது . அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அதே போல் யாங்கோன்-மண்டலே விரைவுச்சாலையில் ஒரு ரயில்வே பாலம் மற்றும் ஒரு சாலை பாலம் இடிந்து விழுந்ததாக மியான்மரின் அரசு ஊடகங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Earthquake hits MYANMAR
Earthquake hits MYANMAR [image (tiwtter) @HamdiCelikbas]
7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு, முக்கிய நகர சாலை ஒன்றில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும், மத்திய மியான்மரைத் தாக்கிய நிலநடுக்கத்தால் மண்டலே பகுதி விமான நிலையம் பயங்கர சேதமடைந்துள்ளது.

தாய்லாந்தின் தலைநரகம் பாங்காக்கில் இருக்கும் மெட்ரோ ரயில் ஒன்று ஊஞ்சல் ஆடுவது போல குலுங்கும் பயங்கர காட்சிதான் இது.

பாங்காக்கின் பார்க் ஆரிஜின் தோங்லர் வளாகத்தில் உள்ள மிகப்பெரிய அளவிலான கட்டிடங்கள் அசைந்த காட்சிகள்.

தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில், ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்த (ஸ்விம்மிங் புல்) குளத்திலிருந்து தண்ணீர் வெளியேறியது, அதே நேரத்தில், அதில் குளித்து கொண்டிருந்தவர்களும் கீழே விழுந்தாக சொல்லப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்