பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6 ஆகப் பதிவு.!
பிலிப்பைன்ஸில் 6.0 ரிக்டர் அளவிலான பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தெற்கு பிலிப்பைன்ஸில் மிண்டானாவ் தீவில் உள்ள டாவோ டி ஓரோ மலைப் பிரதேசத்தில் உள்ள மரகுசன் நகராட்சியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6 ஆகப் பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு பற்றிய தகவல்களை அதிகாரிகள் சரிபார்த்து வருவதாக மரகுசன் பேரிடர் அலுவலக ஊழியர் தெரிவித்தார். மற்ற சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த செய்தியும் வரவில்லை, ஆனால் நகரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களை நாங்கள் சரிபார்த்து வருவதாக அவர் கூறினார்.
பேரிடர் அலுவலகத்தில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது, ஆனால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. பிலிப்பைன்ஸில் நிலநடுக்கங்கள் தினசரி நிகழ்வாகக் கருதப்படுகிறது. இது பசிபிக் நெருப்பு வளையம்(Pacific Rings of Fire) அருகே அமைந்துள்ளது மேலும் எரிமலை செயல்பாட்டின் மூலமும் இங்கே அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.