மீண்டும் நேபாளத்தில் நில நடுக்கம்.! இந்திய பகுதிகளிலும் நில அதிர்வு.!

நேபாள நாட்டில் இன்று காலை 11.45 மணியளவில், இமயமலை பகுதி மாவட்டம் ஹால்ட்வாணி பகுதியில் இருந்து வடகிழக்கில் 39 கிமீ தூரத்தில் பஜாங்கில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நேபாளத்தின் தேசிய நிலநடுக்க அளவீடு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது .
இந்திய நில அதிர்வு வானிலை ஆய்வு மையத்தின் ரிக்டர் அளவுகோலின்படி 5 என பதிவாகியுள்ளது . நேபாளத்தின் தேசிய நிலநடுக்க அளவீடு மற்றும் ஆராய்ச்சி மைய அளவீட்டின்படி 4.9 ரிக்டர் என பதிவாகியுள்ளது.
அதேபோல ஐரோப்பிய வானிலை ஆய்வு மையமும், இந்த நில அதிர்வை உறுதிப்படுத்தியுள்ளது. அவர்கள் 5 முதல் 6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இந்த நில அதிர்வானது இந்திய மாநிலம் உத்தரகாண்ட் பகுதியிலும், தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த அக்டோபர் 3 (செய்வ்வாய்) பிற்பகல் 2:40 மணியளவில், பஜாங்கில் உள்ள டல்கோட்டில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின்னர் இன்றும் அதே இடத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது மக்களை அச்சமடைய வைத்துள்ளது.
நேற்று, நேபாள பிரதமர் உத்தரவின் பெயரில், அரசின் உயர்மட்டக் குழுவானது அமைக்கப்பட்டு, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களைக் கண்காணித்து அதனை சரி செய்ய நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அந்தக்குழு சென்றுள்ளது. இன்னும் எவ்வளவு சேதம் என்ற விவரம் தெளிவாகத் தெரியவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025